9 வயது சிறுமியை சீரழித்து கொன்ற சிறுவன்.. மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

 
Rape

மத்திய பிரதேசத்தில் ஆபாச படம் பார்த்த அண்ணன், தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் உள்ள 9 வயது சிறுமியின் அண்ணன் செல்போனில் ஆபாசப் படம் பார்த்துவிட்டு தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெறித்துக் கொன்றதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அன்று இந்தக் கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. மகன் செய்த குற்றத்தை மூடி மறைக்க தாயும் இரண்டு மூத்த சகோதரிகளும் உடந்தையாக இருந்தனர் என்றும் போலீசார் விசாரணையில் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அன்று ஜாவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் அவரது வீட்டின் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது.

dead-body

சிறுமியின் அண்ணனான 13 வயது சிறுவன், 17, 18 வயதான இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் அவர்களின் தாய் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மகன் செய்த குற்றத்தை மறைக்க முயன்றதாக ஒப்புக்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவம் நடந்த அன்று இரவு வீட்டில் உள்ள் அறையில் தூங்கியிருக்கிறார். அவருக்கு அருகில் சிறுமியின் அண்ணனும் தூங்கியுள்ளார். தனது செல்போனில் ஆபாச படத்தைப் பார்த்த சிறுவன் அருகில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். சிறுமி தந்தையிடம் புகார் செய்யப்போவதாக மிரட்டியதால், சிறுவன் தங்கையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

Madhya Pradesh

பின்னர் தனது தாயை எழுப்பி நடந்த சம்பவத்தை தெரிவித்துவிட்டு வந்த சிறுவன், சிறுமி இன்னும் உயிருடன் இருப்பதைக் கண்டு, மீண்டும் கழுத்தை நெரித்துச் சாகடித்துள்ளார். சம்பவம் குறித்து கலக்கமடைந்த தாய் சிறுவனைக் காப்பாற்றும் எண்ணத்துடன் நடந்ததை மூடி மறைத்துள்ளார். சம்பவத்தின் பின் விழித்த சிறுவனின் இரண்டு மூத்த சகோதரிகளுக்கும் இந்த விஷயம் தெரிந்தே இருந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவனும், அவனது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர். விசாரணையை திசைதிருப்ப சிறுமியை விஷ பூச்சி கடித்ததாக கூறி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் அவர்கள் மறுக்கவே சிறுமியின் உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சோதனை செய்தபோது, அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. கடந்த 2 மாதகாலமாக போலீசார் அழுத்தம் கொடுத்து விசாரித்ததில் தற்போது அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

From around the web