தண்ணீரில் மூழ்கடித்து சிறுவன் கொலை.. ஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் விபரீதம்!

 
Karaikal

காரைக்கால் அருகே ஓரின சேர்க்கைக்கு மறுத்த 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்து உள்ள நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சகோதரியின் மகனை தத்தெடுத்து வளர்த்து வந்தார். தற்போது 9 வயதான நிலையில் அந்த சிறுவன் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த ஜனவரி 17-ம் தேதி திடீரென மாயமான அந்த சிறுவன், மறுநாள் (18-ம் தேதி) அதிகாலை, அங்குள்ள வாய்க்காலில் நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டான்.

இதுகுறித்து நெடுங்காடு போலீசார் விசாரணை நடத்தினர். அவனது உடலில் காயங்கள் இருந்தன. இதற்கிடையே போலீசார் தொடர்ந்து விசாரித்ததில், அதே ஊரைச் சேர்ந்த கஸ்பர் மகன் அருள்ராஜ் (27) என்பவர் தலைமறைவானது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரிக்க வேண்டும் என போலீசார் முயன்ற போது அவர் திருப்பூர் சென்றது தெரியவந்தது.

Rape

அவனது செல்போனில் போலீசார் பலமுறை தொடர்புகொண்டும் வர மறுத்ததால், கஸ்பர் மூலம் அருள்ராஜை நேற்று முன்தினம் காரைக்காலுக்கு போலீசார் வரவழைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணையில், கொலை நடந்த அன்று, குறிப்பிட்ட இடத்தில் அருள்ராஜ் செல்போனில் செக்ஸ் படம் பார்த்துக் கொண்டிருந்துள்ளான். அந்த சமயம் அங்கு வாய்க்காலில் குளித்த சிறுவனை, அருள்ராஜ் நைசாக பேசி அழைத்து, செல்போனில் செக்ஸ் படத்தை காண்பித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து ஓரின சேர்க்கைக்கு வலுக்கட்டாயமாக அழைத்தபோது, சிறுவன், மறுத்ததோடு, அருள்ராஜின் கையை கடித்து மறுத்து ஓடவே, ஆத்திரத்தில், சிறுவனை அருள்ராஜ் காலால் உதைத்து தள்ளியபோது, சிறுவன், வாய்க்கால் ஓரம் இருந்த கூர்மையான கம்பில் கழுத்தில் குத்தி மயங்கி விழுந்துள்ளான்.

 Nedungadu PS

இது வெளியில் தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்ற பயத்தில், சிறுவனை வாய்க்கால் தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு அருள்ராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது. அதன்படி அருள்ராஜ் மீது போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி அருள்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.

From around the web