இளைஞரை கொடூரமாக தாக்கிய பூம்பூம் மாடு.. நொடிப்பொழுதில் நடந்த அதிசயம்.. வைரல் வீடியோ!

 
Karnataka

கர்நாடாகாவில் சாலையில் பெண் ஒருவர் இழுத்துச் சென்ற பூம்பூம் மாடு, திடீரென இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது பாய்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் சென்னையில் ஏற்படுத்தும் பாதிப்பு வார்த்தைகளால் சொல்லவே முடியாது. திடீரென சாலையில் செல்வோர் மீது ஆக்ரோசத்துடன் மோதுவது அடிக்கடி சென்னையில் நடக்கும் நிகழ்வாக உள்ளது. சென்னையை போல் பெங்களூர் நகரிலும் மாடுகளால் அடிக்கடி சிக்கல் ஏற்படுகிறது.

Karnataka

பெங்களூர் மகாலக்‌ஷ்மி நகர் லேஅவுட் நீச்சல் குளம் சந்திப்பு அருகே பெண் ஒருவர் சாலையில் பூம்பூம் மாட்டினை இழுத்து சென்று கொண்டிருந்தார். அந்த சாலையின் ஒருபக்கம் பெரிய டிரக் லாரி ஒன்று கடந்து சென்று கொண்டிருந்தது. சாலையின் இந்த பக்கம் பூம்பூம் மாட்டினை பெண் இழுத்து சென்றார். சாலையில் மாடு அமைதியாக கடந்து செல்வதாக தோன்றியது.

இந்நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் எதிர்திசையில் சென்ற இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பூம்பூம் மாடு திடீரென முட்டி தூக்கி வீசியது. இதில் பைக்கில் வந்தவவர் லாரியின் சக்கரங்களுக்கு நடுவில் சிக்கி கொண்டார். நல்ல வேளையாக உடனடியாக சுதாரித்த டிரைக் டிரைவர் நொடிப்பொழுதில் பிரேக் போட்டு பைக்கில் வந்தவர் மீது சக்கரத்தை ஏற்றாமல் அப்படியே நிறுத்தினார்.


இதனால் சில நொடி பொழுதியில் அதிர்ஷ்டவசமாக பைக் டிரைவர் உயிர் தப்பினார். சமயோஜிதமாக செயல்பட்டு டிரக் டிரைவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

From around the web