பள்ளிகளில் குண்டு வெடிப்பு மிரட்டல்.. தலைநகர் டெல்லியில் பரபரப்பு

 
Delhi

டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள மதர் மேரி பள்ளி, துவாரகாவில் உள்ள டிபிஎஸ் பள்ளி மற்றும் சன்ஸ் கிரிதி ஆகிய பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

bomb

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நொய்டாவில் உள்ள பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். டெல்லியில் உள்ள பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பள்ளிகளுக்கு சமீபத்தில் வந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே இ-மெயில் மூலம் ஒரே விதமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web