சட்டபேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்து சிக்கிய பாஜக எம்எல்ஏ.. வெளியான வீடியோவால் சர்ச்சை!

திரிபுராவில் சட்டப்பேரவைக்குள் ஆளும் பாஜக எம்எல்ஏ ஒருவர் அபாச படம் பார்த்து சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் முதல்வர் மாணிக் சாஹா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து பாஜக மீண்டும் ஆட்சியை கைபற்றியது. தற்போது மாநில சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆளும் பாஜக எம்எல்ஏவான ஜாதாப் லால் நாத் சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெறும் போது தனது இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவர் தனது செல்போனில் ஆபாச பட வீடியோக்களை பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்பசா தொகுதி எம்எல்ஏவான ஜதப் லால் நாத்தின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகளும் நெட்டிசன்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இது குறித்து எம்எல்ஏ ஜதாப் லாலிடம் விரைவில் விளக்கம் கேட்கப்படும் என மாநில பாஜக தலைவர் ரஜிப் பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார். எம்எல்ஏவுக்கு கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
So, BJP MLAs keep the legacy of watching porn during the Assembly sessions!
— Mayukh Biswas (@MayukhDuke) March 30, 2023
Now, BJP MLA from Bagbassa, north tripura Jadab Lal Nath was caught watching porn during the Tripura Assembly session.
Shame!#ModiHaiTohMumkinHai#SanskariRSS #BJPFailsIndia pic.twitter.com/iVyoF6fNj5
இது குறித்து புகாருக்கு ஆளான எம்எல்ஏ ஜதாப் லால் விளக்கம் தெரிவித்துள்ளார். பேரவைக்குள் செல்போன் பயன்படுத்த கூடாது என தனக்கு தெரியும், ஆனால் அப்போது தொடர்ச்சியாக எனக்கு செல்போன் அழைப்புகள் வந்து கொண்டே இருந்ததால் நான் செல்போனை எடுத்தேன். அப்போது திடீரென ஆபாச படங்கள் ஓடத் தொடங்கியது. ஆனால் உடனடியாக அதை மூடிவிட்டேன் என்று ஜதாப் விளக்கம் அளித்துள்ளார்.