பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்.. மனதை பதைபதைக்க செய்யும் வீடியோ காட்சிகள்!
மத்திய பிரதேசத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி மீது பாஜக இளைஞர் அணி நிர்வாகி சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி மீது மதுபோதையில் இருந்த ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சிறுநீர் கழித்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏவின் நெருங்கிய உறவினரும், பாஜக பிரமுகருமான பர்வேஷ் சுக்லா என்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அவரை கைது செய்ய போலீசார் முயற்சித்த நிலையில் பர்வேஷ் தலைமறைவானார்.
இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் குற்றவாளி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் நடத்தி பரவேஷ் சுக்லாவை கைது செய்த போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்.சி., எஸ்.டி, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
◆ युवक पर पेशाब करने वाले शख्स पर सीएम शिवराज का बड़ा एक्शन
— News24 (@news24tvchannel) July 4, 2023
◆ BJP के पूर्व विधायक प्रतिनिधि प्रवेश शुक्ला पर लगेगा NSA #MadhyaPradesh | #viral | #PraveshShukla pic.twitter.com/v67iwoJxnW
இதற்கிடையில் இவ்விவகாரம் தொடர்பாகப் பேட்டியளித்த முதல்வர் சிவ்ராஜ் சவுகான், “கிரிமினல்களுக்கு சாதி, மதம், கட்சி என எதுவும் இல்லை. ஒரு கிரிமினல் எல்லா வகையிலும் கிரிமினல் மட்டுமே. இந்த நபர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.