பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வாக்களிக்கலாம்?ப.சிதம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்!!

 
Election commission Election commission

புலம்பெயர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக வெளிவரும் தகவல் ஆபத்தானது மற்றும் சட்டவிரோதமானது ஆகும். இது தென் மாநில மக்கள் தங்களுக்கு விருப்பமான அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடுவது போன்றது ஆகும் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம்  கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், ”மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 19(பி) பிரிவின்படி, ஒரு தொகுதியில் தங்கியிருக்கும் எவரும் (சொந்த வீடு இல்லாவிட்டாலும்) அங்கு தன்னை வாக்காளராக பதிவு செய்து கொள்ள உரிமை உள்ளது.

எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் டெல்லியில் தற்காலிகமாக வசித்து வந்தாலும் அவர் அங்கு தன்னை வாக்காளராக பதிவு செய்துகொள்ள முடியும். இதுபோல, பிஹாரைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் தற்காலிகமாக தங்கியிருந்தாலும் இங்கு தன்னை வாக்காளராக பதிவு செய்துகொள்ள முடியும்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை குறித்து அரசியல் தலைவர்கள் தவறான கருத்துகளை பரப்பக் கூடாது” என்று கூறியுள்ளது.

பிழைப்புக்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பீகார், உ.பி மற்றும் வட மாநில புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கப்பட்டால், அது தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web