ஜி20 மாநாட்டில் பாரத் பெயர்ப் பலகை.. பிரதமர் மோடி முன் வைக்கப்பட்ட சம்பவம்!

 
Modi

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி இருக்கைக்கு முன்பு இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என குறிப்பிடப்பட்டுள்ள பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஜி20 நாடுகளின் 18வது உச்சிமாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. இன்றும், நாளையும் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைவர்கள் இந்தியா வருகை வந்துள்ளனர்.

G20

இந்நிலையில் இன்று காலை ஜி20 மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் பாரத் மண்டபம் வந்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். அதன் பின்னர் அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றனர். அதன் பின்னர் மாநாடு தொடங்கியது.


இந்நிலையில் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் உலக தலைவர்களின் நாடுகளை குறிக்கும் வகையில் பெயர் பலகை வைக்கப்படும். அப்படி வைக்கப்பட்ட பெயர்பலகையில் பிரதமர் நரேந்திர மோடியின் முன் வைக்கப்பட்டுள்ள பலகையில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

From around the web