கிலோ ரூ.25-க்கு பாரத் அரிசி.. ஒன்றிய அரசின் அசத்தல் திட்டம்!

 
Rice

பாரத் பிராண்டின் கீழ் ஒரு கிலோ அரிசியை ரூ.25-க்கு விற்பனை செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை குறைக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தன. அதன் ஒரு பகுதியாக பாரத் பிராண்டின் கீழ் ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலமாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும் என ஒன்றிய அரசு நம்புகிறது. இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மூலம் இந்த குறைந்த விலை அரிசி விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

Rice

பாரத் பிராண்டின் கீழ் ஒன்றிய அரசு ஏற்கனவே கோதுமை மாவு, பருப்பு வகைகளை விற்பனை செய்து வருகிறது. இதில் தற்போது அரிசியும் சேர்க்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் தானியங்களின் விலை 10.27 சதவீதம் உயர்ந்துள்ளது. உணவுப் பணவீக்கம் நவம்பரில் 8.70 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் உணவுப் பணவீக்க விகிதம் 6.61 சதவீதமாக இருந்தது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் தானியங்களின் விலை தொடர்ந்து அதிகரித்தால் அது ஒன்றிய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் தானியம் மற்றும் அரிசியின் விலையை குறைக்க ஒன்றிய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

Rice Wheat

இந்திய உணவு கழகம் அரிசிக்கான ஒப்பன் மார்க்கெட் விற்பனை திட்டத்தின் விதிகளை மாற்றியமைத்தது. ஏலதாரர் ஏலம் எடுக்கக்கூடிய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அரிசியின் அளவு முறையே 1 மெட்ரிக் டன் மற்றும் 2,000 மெட்ரிக் டன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தையில் தானியம், அரிசி விநியோகத்தை அதிகரிக்கவும் ஒன்றிய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

From around the web