மக்களே உஷார்! உயிரை பறிக்கும் டெங்கு.. கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பலி..!

 
Puducherry

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு 19 வயது கல்லூரி மாணவி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஏராளமானவர்களுக்கு காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

Dengue

இதனிடையே புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி (19). இவர், தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெங்கு அறிகுறி இருந்ததன் அடிப்படையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெளியான மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில், மாணவி டெங்கு நோய் காரணத்தால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழந்திருப்பது புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dead-body

முன்னதாக, சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யனார் மற்றும் சோனியா தம்பதியினரின் 4 வயது மகன் ரக்‌ஷன் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web