பொதுமக்களே உஷார்.. அதி வேகத்தில் பரவும் கொரோனா தொற்று.. விரைவில் ஊரடங்கு?

 
corona

கேரளாவில் டிசம்பர் மாதம் முதல் 8 நாட்களில் புதிதாக 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் இரண்டரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் நீடித்தது. இதன் காரணமாக உலகம் முழுவதும் 69.54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. இதில் இருந்து உலகம் தற்போது மீண்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Corona

குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர் ) முதல் 8 நாட்களில் புதிதாக 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவீதம் பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

KCV

இது குறித்து அம்மாநில மருத்துவர் சன்னி கூறியதாவது, சுவாச கோளாறுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படுகிறது. காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம். வைரஸ் தொற்று நோய்களைத் தவிர்க்க பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறினார்.

From around the web