தமிழ்நாட்டை வஞ்சிப்பதா? நாடாளுமன்றத்தில் கனிமொழ் எம்.பி. முழக்கம்!!

 
Kanimozhi

மக்கள் தொகைக் கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தி, வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறியுள்ள தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சித்து வருவதாக கனிமொழி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். நல்லா படித்து வகுப்பில் முதலாவதாக இருக்கும் மாணவனை வெளியே நிற்கச் சொல்வது போல் இருக்கிறது ஒன்றிய அரசின் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார் கனிமொழி.

தமிழ்நாட்டை பேரிடர் அபாயம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசிய கனிமொழி தனது உரையின் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

”நாடாளுமன்றத்தில் இன்று பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 மீதான விவாதத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தையும், அவற்றை ஒன்றிய அரசு கையாளும் தன்மை குறித்தும் பேசினேன். இயற்கை பேரிடர் அபாயம் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்க்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டிற்கு போதிய பேரிடர் நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டினேன்” என்று பதிவில் கூறியுள்ளார்


 

From around the web