திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு.. சந்திரபாபு நாயுடுவிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

 
Tirupati

எந்த ஆதாரமும் இன்றி திருப்பதி லட்டு குறித்து சந்திரபாபு நாயுடு பொதுவெளியில் புகார் கூறியது தேவையில்லாதது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை ஒன்றிய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்யப்பட்டத்தில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டையும் கூறினார். இந்த விவகாரம் பக்தர்கள் மற்றும் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரிக்க கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பியான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) முன்னாள் தலைவர் ஒய்வி சுப்பா ரெட்டி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

ChandrababuNaidu

அப்போது திருப்பதி தேவஸ்தானம் சார்பாக மனுத்தாக்கல் செய்ய சுப்பிரமணியன் சுவாமிக்கு அனுமதி அளித்தது யார்? ஆந்திர அரசு கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு பொதுவெளியில் கருத்து வெளியிட்டது ஏன்? லட்டு சர்ச்சை குறித்து சிறப்பு குழு அமைக்கப்பட்டது என்றால் பொதுவெளியில் கருத்து வெளியிடுவதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், திருப்பதி லட்டு விவகாரம் கோடான கோடி பக்தர்களின் உணர்வு சார்ந்த விஷயம். இதில் அரசியல் கூடாது. சிறப்பு விசாரணை குழு முடிவு வெளியாகும் வரை காத்திருக்காமல் ஏன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்க வேண்டும்?

Supreme Court

கலப்பட நெய் தான் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கு தெளிவான பதிலே இல்லை. பிரசாதத்தில் கலப்படம் இருப்பது உறுதியாக தெரியாத நிலையில் கருத்து வெளியிட்டது ஏன்? என்று கண்டனம் தெரிவித்தனர். கடவுள் விவகாரத்தில் ஆந்திர அரசு அரசியலை தள்ளி வைக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

From around the web