8 நாட்களுக்கு வங்கி விடுமுறை.. எந்தெந்த நாட்கள் தெரியுமா?

 
Bank

அக்டோபர் மாதத்தில் இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், இன்னும் 8 வங்கி விடுமுறைகள் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும், வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் அறிவிக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.

இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் மீதமுள்ள 12 நாட்களில் 11 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அக்டோபர் மாதத்திற்கான இந்திய ரிசர்வ் வங்கி விடுமுறை பட்டியலின் படி, துர்கா பூஜை, தசரா மற்றும் பிற பண்டிகைகள் மற்றும் நாட்கள் காரணமாக வங்கிகள் மூடப்படும்.

bank

மாநிலங்கள் மற்றும் நகரங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகளைப் பொறுத்து வங்கி விடுமுறைகள் மாறுபடலாம். வங்கிக் கிளை மூடப்படும் போதெல்லாம், ஆன்லைன் வங்கி மூலம் உங்கள் வீட்டிலிருந்தே வங்கி தொடர்பான பணிகளைச் செய்யலாம். வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் விடுமுறை நாட்களின் பட்டியல்:

அக்டோபர் 21, 2023 - சனிக்கிழமை - துர்கா பூஜை (மகா சப்தமி) - திரிபுரா, அசாம், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கத்தில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
அக்டோபர் 23, 2023 - திங்கட்கிழமை - மகாநவமி, ஆயுத பூஜை, துர்கா பூஜை, விஜய தசமி - திரிபுரா, கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, அசாம், ஆந்திரா, கான்பூர், கேரளா, ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
அக்டோபர் 24, 2023 - செவ்வாய்கிழமை - தசரா (விஜயதசமி), துர்கா பூஜை அன்று ஆந்திரா மற்றும் மணிப்பூர் தவிர அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
அக்டோபர் 25, 2023 - புதன்கிழமை - துர்கா பூஜை (தாசைன்) - சிக்கிமில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
அக்டோபர் 26, 2023 - வியாழன் - துர்கா பூஜை (தாசைன்)/ இணைப்பு நாள் - சிக்கிம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
அக்டோபர் 27, 2023 - வெள்ளிக்கிழமை - துர்கா பூஜை (தசைன்) - சிக்கிமில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
அக்டோபர் 28, 2023 - சனிக்கிழமை - லட்சுமி பூஜை- மேற்கு வங்கத்தில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
அக்டோபர் 31, 2023 - செவ்வாய்கிழமை - சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் - குஜராத்தில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.

Bank strike

அக்டோபர் 2023ல் வங்கி வார விடுமுறை நாட்கள்:

அக்டோபர் 22, 2023 - ஞாயிறு விடுமுறை
அக்டோபர் 28 - நான்காவது சனிக்கிழமை விடுமுறை
அக்டோபர் 29, 2023 - ஞாயிறு விடுமுறை.

From around the web