40 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை.. மீட்புப் பணிகள் தீவிரம்

 
Delhi

டெல்லியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மூடப்படாத போர்வெல் குழிகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தலைநகர் டெல்லியில் விகாஸ்புரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கேசாபூர் மண்ட என்ற பகுதியில் நீர்வளத் துறைக்குச் சொந்தமான ஒரு போர்வெல் குழி உள்ளது.

Delhi

இந்தக் குழியில் குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த டெல்லி தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் டெல்லி காவல்துறையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக  முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்த இடத்துக்கு இணையாக மற்றொரு பள்ளத்தைத் தோண்டி மீட்புப் பணியை தொடர்வோம்” என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web