ஆட்டோ பரிசு.. பட்டாசு மீது உட்கார்ந்தால் பறிபோன உயிர்.. அதிர்ச்சி வீடியோ

 
Karnataka

கர்நாடகாவில் பட்டாசு மீது அமர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் சபரீஷ் (32). இவர், தனது நண்பர்களுடன் கடந்த 31-ம் தேதி தீபாவளியை மதுபோதையில் கொண்டாடி உள்ளார். அப்போது சக்தி வாய்ந்த பட்டாசு மீது வெடிக்கும்வரை யார் அமர்ந்து இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆட்டோ  ரிக்சா வாங்கி தருவதாக சபரீஷீன் நண்பர்கள் பந்தயம் கட்டியுள்ளனர்.

dead

எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த சபரீஷ், ஆட்டோ ரிக்சா கிடைக்கும் என்ற ஆசையில் இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார். பெரிய பட்டாசு பெட்டியில் சபரீஷ் அமர்ந்துள்ளார். அவரது நண்பர்கள் பட்டாசை பற்றவைத்து விட்டு அங்கிருந்து ஓடியுள்ளனர். பின்னர் அதீத சத்தத்துடன் பட்டாசு வெடித்துள்ளது.


இதனால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த சபரீஷை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சபரீஷ் நேற்று முன்தினம் (நவம்பர் 2)உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web