ரேப்பிடோ பைக் டாக்சி ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்... வெளியான அதிர்ச்சி வீடியோ!!

 
Auto driver

கர்நாடகாவில் வடகிழக்கு மாநில இளைஞரை கர்நாடகத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தாக்கி தொல்லை தரும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்திரா நகர் மெட்ரோ ஸ்டேஷன் பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ கடந்த 5-ம் தேதி அன்று ட்விட்டரில் பகிரப்பட்டு வைரலானது. இதில், ரேப்பிடோ ஓட்டும் இளைஞரை பிடித்து வைத்து பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தகராறு செய்கிறார்.

Fight

பைக் ஓட்டும் இளைஞரின் தோற்றம் மூலம் அவர் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர் எனக் கருதப்படுகிறது. அந்த இளைஞரிடம்  இருந்த செல்போனை பிடுங்கிக் கொண்ட அட்டோ ஓட்டுநர் கன்னட மொழியில், “நண்பர்களே எப்படி ரேப்பிடோ பைக்குகள் சட்ட விரோதமாக இயங்குகிறது எனப் பாருங்கள். இந்த நபர் வேறு நாட்டில் இருந்து வந்து இங்கே ராஜா மாதிரி வண்டி ஓட்டி செல்கிறார்.

வெள்ளை நம்பர் பிளேட் வைத்திருந்தாலும் ஒரு பெண் வாடிக்கையாளரை ஏற்றி ஓட்டி செல்கிறார்” என அந்த பைக் டிரைவரை திட்டி, அவரது போனை பிடுங்கி தரையில் வீசி உடைத்தார்.


இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மீது புகார் எடுப்பதாக பெங்களூரு நகர காவல்துறை உறுதி அளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர் புகார் தர வேண்டும் எனவும் காவல்துறை கூறியுள்ளது. ஆட்டோ ஓட்டுநரின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web