ஜம்மு காஷ்மீரில் பக்தர்கள் மீது தாக்குதல்.. 10 பேர் பலி.. 33 பேர் படுகாயம்

 
Jammu Kashmir

ஜம்மு காஷ்மீரில் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரபல சிவகோடி குகைக் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்குச் செல்வதற்காக பேருந்தில் பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். பேருந்து ரியாசி மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

Jammu Kashmir

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் அதிகாரி ரியாசி மோஹிதா சர்மா கூறுகையில், “ஷிவ் கோரியில் இருந்து கத்ரா நோக்கி சென்று கொண்டிருந்தவர்கள் பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூட்டினால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. 


இந்த தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என்று கூறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web