சரியான நேரத்தில் ....முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு!!

 
Fairdelimitation

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரியான நேரத்தில் சரியான முடிவை கையில் எடுத்து செயல்பட்டுள்ளார் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

“ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த முயற்சி இன்றைய சூழலில் முகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல. அதனால் தான் இந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களும் பங்கேற்றுள்ளன.

நமது நாடு எதிர்கொள்ளப்போகும் மிக முக்கியமான பிரச்சனையை கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் சரியான முடிவை கையில் எடுத்து செயல்பட்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர். அது எங்களுக்கும் சரி எனப் பட்டதால் தான் அந்த கூட்டத்தில் நன் உட்பட அனைவரும் பங்கேற்றோம்,”  என்று பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்