அருணாசல பிரதேசத்தில் 600 பள்ளிகளை மூடியது அரசு.. சட்டசபையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

 
Class room

அருணாசல பிரதேசத்தில் 600 பள்ளிகளை அரசு முடியுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் பசங் டோர்ஜி சோனா தெரிவித்துள்ளார்.

அருணாசல பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்எல்ஏ குமார் வாயி, கல்வித்துறை தொடர்பான கேள்வி எழுப்பினார். அரசுப் பள்ளிகளின் நிலைமை மற்றும் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

Pasang Dorjee Sona

அந்த கேள்விக்கு, கல்வி அமைச்சர் பசங் டோர்ஜி சோனா அளித்த பதில், மாநிலம் முழுவதும் செயல்படாத அல்லது பூஜ்ஜிய மாணவர் சேர்க்கை கொண்ட சுமார் 600 பள்ளிகளை அரசு மூடியுள்ளது. மாணவர் சேர்க்கை அடியோடு குறைந்து முற்றிலும் செயல்படாத பள்ளிகள் மூடப்பட்டன, மிக குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகள் வேறு பள்ளியுடன் இணைக்கப்பட்டன. இதுபோன்று மேலும் சில பள்ளிகளை மூட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

School

அருணாசல பிரதேசத்தில் 2,800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. இதில், 7,600-க்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர்கள் உள்ளனர். முதல்வர் சிக்சா கோஷ் திட்டத்தின்கீழ் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் ஆசிரியர்களின் பற்றாக்குறை சரிசெய்யப்படுகிறது. ஆசிரியர் நியமன தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அருணாச்சல பிரதேச பொது சேவை ஆணையத்திடம் அரசு கோரிக்கை விடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

From around the web