கணவன் மனைவி இடையே தகராறு... கோபத்தில் மாமியாரின் மூக்கை அறுத்த மருமகன்!!

 
MP

மகளுக்கும் மருமகனுக்கும் இடையே இருந்த பிரச்சனையை தீர்க்க சென்ற மாமியாரின் மூக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் மோர்னியா மாவட்டத்தின் சந்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஹ்மத் பகேல். இவரது மனைவி ராம் விலாசி. இந்த தம்பதிக்கு ஷியாம் சுந்தரி என்ற மகள் உள்ளார். தனது மகளை பக்கத்து ஊரில் வசிக்கும் ராஜூ பகேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். 

மகள் ஷியாம் சுந்தரிக்கும் மருமகன் ராஜூவுக்கும் சமீப காலமாக சின்ன சின்ன சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும், ஷியாம் சுந்தரியை ராஜூ தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஷியாம் சுந்தரி போலீசில் புகார் அளித்ததோடு கணவரை பிரிந்து அம்மா வீட்டில் வசித்து வருகிறார். 

Knife

இந்த நிலையில் மகளை பார்க்க தந்தை ரஹ்மத் மற்றும் தாய் ராம் விலாசி சென்றுள்ளனர். மோதல் தொடர்பாக மகளிடம் பேசிய நிலையில், இனி தன்னால் கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என ஷியாம் சுந்தரி கூறியுள்ளார். இந்த பிரச்சினையை தொடர்ந்து ரஹ்மத், ராம் விலாசியுடன் அங்கிருந்து கிளம்பியுள்ளார். 

அப்போது அவரது மருமகன் ராஜூ தனது 2 உறவினர்களுடன் சேர்ந்து மாமனார், மாமியாரிடம் சென்று சண்டை போட்டுள்ளார். மேலும், திடீரென கோபத்தில் அவரது மாமியார் ஷியாம் சுந்தரியின் மூக்கை அறுத்துவிட்டு தப்பி ஓடி விட்டார். 

Police-arrested

இதனையடுத்து, தனது மனைவி ராம் விலாசியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார் ரஹ்மத். மேலும், இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளித்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தனது மனைவியை மாமியார் தான் தூண்டிவிட்டு பிரச்சினை உருவாக்குவதாக கூறி மருமகன் ராஜூ மூக்கை அறுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட ராம் விலாசி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

From around the web