மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்.. ஓடும் காரில் கூட்டுப் பாலியல் பலாத்காரம்.!

 
rape

உத்தர பிரதேசத்தில் ஓடும் காரில், கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2012 தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே போன்ற ஒரு சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் தற்போது அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு மருத்துவ ஆலோசனைக்காக கல்லூரி மாணவி ஒருவர் வந்துள்ளார். இதனிடையே அந்த மருத்துவமனையின் அருகில் டீக்கடை நடத்தி வருபவர் சத்யம். இவருக்கும் அந்த இளம்பெண்ணுக்கு டீக்கடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

UP

வழக்கம்போல் நேற்று டீ குடிக்க வந்த இளம்பெண்ணிடம் சத்யம் தனது போனை சார்ஜ் செய்ய உதவுமாறு அப்பெண்ணை மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் அழைத்திருக்கிறார். இதையடுத்து அந்த பெண் காருக்குள் ஏறியிருக்கிறார்.

அப்போது சத்யம் மற்றும் காரில் இருந்த மேலும் 2 பேர் அப்பெண்ணை  காருக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்ட அப்பெண்ணை சாலையில் தள்ளிவிட்டு காரில் தப்பி சென்றனர்.


இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய சத்யம் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web