ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன்.. 24 மணி நேரம்... துடிதுடித்து பலியான சோகம்!

 
MP

மத்திய பிரதேசத்தில் 60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 43 அடியில் சிக்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில், மூடப்படாத நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் நேற்றைய தினம் லோகேஷ் அஹிர்வார் என்ற 8 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளான். இதையடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

சிறுவன் தற்போது 43 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாகவும், ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் வழங்கப்பட்டு சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மீட்பு பணியில் 3 மாநில மீட்பு படை அணிகள் மற்றும் ஒரு தேசிய மீட்பு படை அணி ஆகியோர் ஈடுபட்டனர். 

boy-dead-body

ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் மற்றொரு குழி தோண்டப்பட்டு, சிறுவனை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறுவனை மீட்கும் முயற்சியில் 24 மணி நேரமாக ஈடுபட்டனர். 60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 43 அடியில் சிக்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 24 மணி நேரமாக மீட்பு படையினர் போராட்டத்திற்கு பலன் கிடைக்கவில்லை. சிறுவன் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விதிஷா ஆட்சியர் உமா சங்கர் பார்கவா செய்தியாளர்களிடம் கூறுகையில், “பரிசோதனைக்குப் பிறகு சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிதியுதவி அறிவித்தார் என்று தெரிவித்தார்.

MP

இந்த சம்பவம் குறித்து துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் (எஸ்டிஎம்) ஹர்ஷல் சவுத்ரி கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு சிறுவனை மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டத் தலைமையகத்திலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ள லேட்டரி நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

From around the web