பல்டி அடித்த அமித்ஷா.. வெளிநாட்டு மொழிகளை எதிர்க்கக் கூடாது!!

ஆங்கிலத்தில் பேசுவதை அவமானமாகக் கருதும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் பேசியிருந்தார். அமைச்சரின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் ஜூன் 26, 2025 அன்று நடைபெற்ற அலுவல் மொழி துறையின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித்ஷா தனது முந்தைய கருத்துக்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளார்.
இந்தி மொழியானது எந்த ஒரு இந்திய மொழியையும் எதிர்க்கவில்லை. இந்தி மொழி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நட்பு மொழி. எந்த ஒரு மொழியையும் நாம் எதிர்க்கவில்லை. எந்த ஒரு அன்னிய மொழியையும் நாம் எதிர்க்கவில்லை. ஆனால் நமது மொழியின் பெருமைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்று பேசியுள்ளார் அமைச்சர் அமித்ஷா.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி எழுதிய மிசா காலம் (அவசரநிலை காலம்) குறித்த புத்தகம் "The Emergency Diaries" என்ற புத்தகத்தை அமைச்சர் அமித்ஷா ஜூன் 25, 2025 அன்று வெளியிடார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த புத்தகம், 1975-இல் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை காலத்தில் அவரது அனுபவங்களையும், ஒரு தலைவராக பிரதமர் மோடியின் அரசியல் பயணத்தை எவ்வாறு அது வடிவமைத்தது என்பதை பற்றியதாகும்.