அம்பேத்கர் ... அம்பேத்கர் ! சென்னையை அதிரச்செய்த முழக்கம்!!

 
Thirumavalavan

டாக்டர்.அம்பேத்கரை பாராளுமன்றத்தில் அவமரியாதை செய்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

“அமைச்சர் அமித்ஷாவுக்கு அரசியலமைப்புச் சட்டம் பற்றியும் தெரியாது, அம்பேத்கரைப் பற்றியும் தெரியாது. அறிவாற்றல் உள்ளவரகளை அறிவாற்றல் உள்ளவர்களால் தான் புரிந்து கொள்ள முடியும். அம்பேத்கரின் பங்களிப்பைப் பற்றி தெரிந்திருந்தால் அவர் அப்படிப் பேசி இருக்க மாட்டார். ஒன்றிய அமைச்சர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் குறித்து தேர்வு வைத்தால் ஒருவர் கூட தேர்ச்சி பெறமாட்டார்கள்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஆயிரம் தடவை டாக்டர் அம்பேத்கர் என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. கூட்டத்தில் கூடியிருந்தவர்களும் இணைந்து முழங்கியதால் வள்ளுவர் கோட்டம் பகுதியே அம்பேத்கர் என்ற பெயரால் அதிர்ந்தது.


 

From around the web