தமிழ்நாட்டில் தொடரும் ஆல் பாஸ்! புதுச்சேரியில் முடிஞ்சது எப்படி?

 
school

ஒன்றிய அரசு கல்வித்துறையின் புதிய அறிவிப்பின் படி 5 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு அனைவரும் தேர்ச்சி என்ற முறை முடிவுக்கு வருகிறது.

ஒன்றிய அரசின் இந்த முடிவு தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கு பொருந்தாது, தமிழ்நாட்டில் 5 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற முறை தொடரும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்

ஆனாலு புதுச்சேரியில் ஒன்றிய அரசின் அறிவிப்பு அமலுக்கு வருவதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். புதுச்சேரியில் பள்ளிகள் சி.பி.எஸ். ஐ பாடத்திட்டத்தில் உள்ளதால் ஒன்றிய அரசின் புதிய நடைமுறை அமல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆக, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரும் கல்வி நிறுவனங்களில் ஒன்றிய அரசின் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்றும் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கே அனைவரும் தேர்ச்சி என்பது தொடர்கிறது என்பது தெளிவாகியுள்ளது.

From around the web