அமெரிக்காவுக்கு திரும்பிய ஏர் இந்தியா விமானம்! அதிர்ச்சியூட்டும் காரணம்!!

 
Air India

அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து புதுடெல்லிக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் அட்லாண்டிக் கடல் மீது பறந்து கொண்டிருந்த நிலையில் மீண்டும் சிகாகோவுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளது. 

கடந்த புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் நள்ளிரவில் தரையிறங்குவதில் சிக்கல்கள் இருந்ததால்  ஐந்து மணி நேரப் பயணத்திற்குப்பின் மீண்டும் அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அது சரி, என்ன காரணத்திற்காக இந்த விமானம் திரும்பி வந்தது தெரியுமா? விமானத்தில் உள்ள 12 கழிப்பறைகளில் 8 கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுள்ளது.  கழிப்பறைகளில் ப்ளாஸ்டிக், துணிகள் என பல பொருட்களைப் போட்டுள்ளதால் கழிப்பறைகள் அடைத்துக் கொண்டிருந்தது தான் காரணம்.

இப்படிப்பட்ட பொருட்களை கழிப்பறையில் போட்டு விமானத்தின் கழிப்பறைகள்  அடைத்துக் கொண்டது இது முதல் முறை அல்ல என்று ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. கழிப்பறையில் பொருட்களைப் போடக்கூடாது என்று கூடத் தெரியாமலா அமெரிகாவுக்குச் செல்கிறார்கள்?