நடிகை மியா கலிஃபா நலமுடன் இருக்க விரதம் இருந்த முதியவர்.. வைரல் வீடியோ

 
Mia Khalifa

ஆபாச பட நடிகை மியா கலிஃபா நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி முதியவர் விரதம் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களில்  கர்வா சௌத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் திருமணமான பெண்கள் தங்கள் கணவர்கள் நீண்ட ஆயுளுடன், நலமுடனும் இருக்க வேண்டி சூரிய உதயம் முதல் சந்திரன் உதயம் வரை விரதம் இருப்பார்கள்.  இந்த விரதத்தின்போது பெண்கள் வட்ட வடிவிலான சல்லடை போன்ற பாத்திரம் மூலமாக தனது கணவனின் முகத்தை பார்ப்பார்கள். 

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் , இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  அந்தவகையில் வடமாநிலங்களில்  கடந்த 20-ம் தேதி கர்வா சௌத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Mia Khalifa

இந்நிலையில், பீகாரை சேர்ந்த ஒரு முதியவர் கர்வா சௌத் விரதம் இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  தனது மனைவி நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி விரதம் இருப்பதற்கு பதிலாக முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிபா நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி அந்த முதியவர் விரதம் இருந்துள்ளார். 

இந்த நோன்பின் இறுதியில் சல்லடை வழியாக அவர் மியா கலிபாவை பார்த்து, நோன்பை முடித்திருக்கிறார். இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 


இந்த வீடியோ பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  அதே சமயம் இத்தகைய செயல்கள் இந்து பண்டிகை மற்றும் அதன்  சடங்குகளை அவமதிப்பதாக உள்ளது என்று சிலர் இதற்கு எதிர்ப்பு வருகின்றனர்.  வீடியோ குறித்து தங்கள் கருத்துகளையும் சமூகதளவாசிகள் கமென்ட்டுகளாக பதிவிட்டு வருகின்றனர்.

From around the web