கல்லூரியில் கரு கலைப்பு... 19 வயது கல்லூரி மாணவி உயிரிழப்பு.. ஆந்திராவில் நடந்த விபரீதம்!!

 
Nellore

ஆந்திராவில் கல்லூரி மாணவி கருச்சிதைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், மரிபாடு மண்டலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், நெல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். கடந்த 11-ம் தேதி அனைத்து மாணவர்களும் கல்லூரி வளாகத்தில் வகுப்பிற்கு வெளியே இருந்தனர். வகுப்பறையில் யாரும் இல்லை. அப்போது வகுப்பில் மாணவி தனியாக இருந்துள்ளார்.

abortion

கதவு உள்ளே பூட்டியிருந்தது. நீண்ட நேரமாகியும் மாணவி வெளியே வரவில்லை. இதையடுத்து மாணவிகள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, இளம்பெண் வகுப்பறையில் ரத்த வெள்ளத்தில் துடித்தார். உடனடியாக இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெல்லூர் ரூரல் போலீசார், விசாரணை நடத்தினர். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உண்மையில் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதா அல்லது யூடியூப் பார்த்து கருச்சிதைவு செய்ய முயன்றாரா என்பது குறித்த தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Dead-body

வகுப்பறையில் ஏன் இப்படி செய்தாள்? அவள் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியுமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணின் செல்போன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அவருக்கு ஆனந்தசாகரின் கார் டிரைவரை தெரியும் என்பது தெரிய வந்துள்ளது. 

மாவட்ட அளவில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக நெல்லூர் ரூரல் சிஐ சீனிவாசலு ரெட்டி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

From around the web