தங்கும் விடுதியில் பணியாற்றிய இளம்பெண்ணை அடித்து இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை.. பகீர் வீடியோ!

 
UP

உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதே மாநிலம் ஆக்ராவின் தஜ்கஞ்ச் பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் 25 வயது பெண் பணியாளரை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து ஒரு கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. தொடர்ந்து, இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியை வன்கொடுமை செய்த நபரே சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதில் “ஆண் ஒருவர் அப்பெண்ணை தாக்கி விடுதி அறைக்குள் வலுக்கட்டாயமாக இழுத்து செல்வதும், அப்போது அந்த பெண் என்னை விட்டுவிடுங்கள்… நான் 2 குழந்தைகளுக்கு தாய்…” எனக் கூறி கதறி அழும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதை வேடிக்கை பார்க்கும் யாரும் உதவ முன்வராத நிலையில், அந்த நபர் அவரை அறைக்குள் இழுத்து செல்லும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

Gang-rape

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதில் தனது ஆண் நண்பர் ஒருவர், மேலும் சில ஆண்களின் உதவியோடு தனக்கு வலுக்கட்டாயமாக மது வழங்கியதாகவும், பின்னர் தன்னை அடித்து விடுதி அறைக்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி மது பாட்டிலால் தலையில் தாக்கி சித்ரவதை செய்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரிலும், வீடியோ காட்சியின் அடிப்படையிலும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி மற்றும் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் விடுதியின் மேலாளார் ரவி ராத்தோர், அவரது நண்பர்கள் மணீஷ், ஜிதேந்திரா, தேவ், கிஷோர் ஆகியோர் மதுபோதையில் பெண்ணிடம் அத்துமீறியது தெரியவந்தது.


மேலும், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கும்பலுக்கு உதவியாக பெண் பணியாளர் ஒருவர் செயல்பட்டதாகவும், அவர் தான் இந்த வீடியோவை எடுத்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து பெண் பணியாளர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web