நடுரோட்டில் இளம்பெண் எரித்துக் கொலை.. தெலுங்கானாவில் பகீர் சம்பவம்!!

 
Telangana

தெலுங்கானாவில் நள்ளிரவில் நடுரோட்டில் வைத்து இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதி்ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் பகுதியில் உள்ள சாய் என்கிளேவ் பகுதியில் நேற்று நள்ளிரவில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் சூராஜ் என்பவர் வந்து கொண்டிருந்தார். அப்போது வீடுகளுக்கு நடுவே ஒரு காலி இடத்தில் தீப்பிடித்து ஒரு பெண்ணின் உடல் எரிந்து கொண்டிருந்தது.

Telangana

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சூராஜ், அப்பகுதியில் வாட்ச்மேனாக பணிபுரியும் அவரது அண்ணன் ஸ்ரீனுவிற்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், எரிந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

எரிக்கப்பட்ட பெண்ணுக்கு 30 வயது இருக்கும் என்றும், திருமணமானவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது சார்மினாரில் உள்ள தொண்டுப்பள்ளியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் கொலையாளி பெட்ரோல் வாங்கியதையும், மற்றொரு நபரின் உதவியுடன் இளம்பெண்ணின் உடலை தீ வைத்து கொளுத்தி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதும் பதிவாகியிருந்தது.

Police

பின்னர் அந்த இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம்பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டரா அல்லது கொலை செய்யப்பட்டு இந்த இடத்தில் கொண்டு வரப்பட்டு எரிக்கப்பட்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web