மதுபோதையில் நடுரோட்டில் இளம்பெண் ரகளை.! காதல் தோல்வியால் நேர்ந்த பரிதாபம்! வைரல் வீடியோ

 
Gwalior

மத்திய பிரதேசத்திரல் இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் மதுபோதையில் ரகளை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் ஒரு இளம்பெண் நடுரோட்டில் மதுபோதையில் ரகளை செய்துள்ளார். அந்த பெண் செய்யும் ரகளை காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை.

வைரலான அந்த வீடியோவில், ஒரு பெண் சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிவதைக் காண முடிகின்றது. சாலையில் செல்லும் மக்களை எல்லாம் அவர் பாடாய் படுத்துகிறார். கார் மீது ஏறுகிறார், ஒருவரின் ஸ்கூட்டரை பிடுங்கிக் கொள்கிறார், சாலை தடுப்புகளை கீழே தள்ளி விடுகிறார். 

Gwalior

பல பெண்கள் அவரை அங்கிருந்து அழைத்துச்செல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர் யாருக்கும் அடங்குவதாகத் தெரியவில்லை. இறுதியில் அங்கு சுற்றி இருந்த பெண்கள் அந்த பெண்ணுக்கு எடுத்துச்சொல்லி புரிய வைக்கிறார்கள். 

இந்த சம்பவம் அரை மணி நேரம் நீடித்ததால் ஏராளமானோர் திரண்டனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிலைமையை கட்டுப்படுத்தினர்.

இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த பயனர், “காதலில் கிடைத்த தோல்வியால் பெண் செய்த கலாட்டா.. இது குவாலியரின் பூல் பாக் சந்திப்பில் நடந்த சம்பவம்” என்று எழுதியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web