காதலனால் கணவரை பிரிந்த இளம்பெண் கர்ப்பம்... திருமணம் செய்ய வற்புறுத்தியதால் படுகொலை.. பகீர் சம்பவம்!

 
UP

உத்தரப் பிரதேசத்தில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கர்ப்பிணியை அவரது காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் ராம்பிரி (20). இவருக்கும் அருண் என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் இந்த தம்பதிக்கு இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் ஓராண்டுக்குப் பின் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து ராம்பிரி தனது தந்தை வீட்டில் வசிக்க தொடங்கினார். இந்த காலக்கட்டத்தில் ஆதேஷ் என்ற இளைஞருடன் ராம்பிருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த உறவு பல ஆண்டுகளாக நீடித்த நிலையில், ஆதேஷ் மூலமாக ராம்பிரி சமீபத்தில் கர்ப்பமாகி உள்ளார். கர்ப்பமடைந்த உடன் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என காதலனை ராம்பிரி வற்புறுத்தத் தொடங்கியுள்ளார். இதில் ஆதேஷுக்கு விருப்பமில்லை. ராம்பிரி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், அவரை தீர்த்துக்கட்ட ஆதேஷ் திட்டம் தீட்டியுள்ளார்.

crime

அதன்படி, கடந்த 2-ம் தேதி இரவு நேரத்தில் காதலியை தனியே வருமாறு ஆதேஷ் அழைத்துள்ளார். அதைகேட்டு ஊரில் உள்ள வயல் பகுதிக்கு நள்ளிரவு நேரத்தில் ராம்பிரி வந்துள்ளார். அப்போது ஆதேஷ் தனது 4 நண்பர்களுடன் சேர்ந்து கர்ப்பிணி பெண்ணை அடித்து கொன்று தப்பி ஓடியுள்ளார்.

மறுநாள் காலை பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கியது. பெண்ணின் செல்பேசி அழைப்புகள் உள்ளிட்ட ஆதரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆதேஷ் குறித்த விவரம் போலீசாருக்கு தெரியவந்தது.

Kerala-youth-arrested-for-molesting-female-doctor

அதைத் தொடர்ந்து அதேஷ் மற்றும் அவரது நண்பர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது. தொடர்ந்து வழக்கில் காதலன் ஆதேஷ், அவரது நண்பர்கள் ஆர்யன், சந்தேஷ், ரோஹித், தீபக் ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

From around the web