ஒரே சம்பவம்... மொத்த இந்தியாவையே பதற்றமடைய வைத்த நபர் கைது..!

 
Kerala

கோழிக்கோடு - கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த மர்ம நபர் உத்தரபிரதேச மாநிலம் ரத்னகிரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு கடந்த 2-ம் தேதி விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. இந்த ரயில் கோழிக்கோட்டை கடந்து கோரப்புழா பாலம் அருகே வந்தபோது, டி-1 பெட்டியில் இருந்த நபர் ஒருவர் திடீரென பையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து சக பயணிகள் மீது ஊற்றினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் சுதாரிப்பதற்குள் அந்த நபர் தீயை பற்ற வைத்தார். இதில் பயணிகள் சிலர் மீதும் ரயில் பெட்டியில் இருந்த சீட்டுகளும் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதனால் உடலில் தீப்பிடித்த பயணிகள் வலி தாங்க முடியாமல் தவித்தனர். அந்த பெட்டியில் இருந்த பயணிகள் உயிருக்கு பயந்து அங்கும், இங்குமாக ஓடினர். அப்போது சிலர் அதிவிரைவாக செயல்பட்டு அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.

ரயில் நின்றதும் பயத்தில் பயணிகள் கீழே இறங்கி ஓடினர். இதில் பயணிகள் மீது தீ வைத்த மர்ம நபரும் தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோழிக்கோடு போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் உயர் அதிகாரிகளும் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

Kerala

இந்த சம்பத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தண்டவாளத்தில் இறந்த நிலையில் 2 வயது குழந்தை சகாரா, அவருடைய சித்தி ரஹமத், மீன் வியாபாரி நவுபீக் ஆகிய 3 பேர் கிடந்தனர். அவர்கள் உடலில் தீப்பிடித்தபோது அதில் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த மர்ம நபர் யார்? எதற்காக ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்? அவர் மாவோயிஸ்டு அல்லது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இதுதொடர்பாக வடமாநில தொழிலாளியை பிடித்து விசாரணை நடத்தினர். 

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வெளியிட்ட நிலையில், குற்றவாளியின் மாதிரி வரைபடத்தையும் வெளியிட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 

மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் படையினர் மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவினர் தேடி வந்த நிலையில், ரத்னகிரியில் சந்தேகிக்கும் வகையில் இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். கேரளா போலீசாரும் தற்போது அந்த நபரை கைது செய்ய மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளனர். விரைவில் குற்றம்சாட்டப்பட்டவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தீவிரவாத தடுப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Kerala-youth-arrested-for-molesting-female-doctor

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஷாருக்கான் சைஃபி என்பது தெரிய வந்துள்ளது. முகம் மற்றும் உடலில் காயங்களுடன் ஷாருக்கான் சைஃபி கைது செய்யப்பட்டு இருக்கிறார். கேரள அரசும் குற்றவாளியை கைது செய்ய 18 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு படையை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கி இருந்தது. 

சம்பவம் நடந்த பின்னர் தண்டவாளத்தில் கிடந்த புத்தக்கத்தில் எழுதப்பட்டு இருந்த வாசகங்கள் மற்றும்  பறிமுறல் செய்யப்பட்ட பை, ஆடைகள், கண்ணாடி ஆகியவற்றின் மூலம் குற்றவாளியை எளிதில் பிடிக்க போலீசார் மற்றும் புலனாய்வு ஏஜென்சிகளுக்கு உதவியது. 

From around the web