இன்ஸ்டாகிராமில் வேறு ஆணுடன் பேசிய பள்ளி மாணவி... இரும்பு கம்பியால் அடித்து கொன்ற காதலன்!! ஜார்கண்ட்டில் அதிர்ச்சி சம்பவம்!!

 
Jharkhand

ஜார்கண்ட்டில் காதலி வேறு நபருடன் இன்ஸ்டாகிராமில் பேசியதால் ஆத்திரம் அடைந்து பள்ளி மாணவன் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள உர்ஜாநகரில் உள்ள ஆங்கில வழி பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனும் அதே வகுப்பில் படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். அந்த மாணவி கோவிந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த புதன்கிழமை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், அன்றைய தினம் மாணவி நண்பர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாட வீட்டை விட்டு சென்றுள்ளார்.

murder

மாலை வெகுநேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் அந்த மாணவியின் பெற்றோர் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். போன் சுவிட்ச் ஆப் என வந்த நிலையில், பதறிப்போன பெற்றோர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இந்நிலையில், அடுத்த நாள் காலை அங்குள்ள வயல் பகுதியில் போலீசார் ரோந்து செய்த போது சிறுமியின் உடல் சிதைந்த நிலையில் இருந்துள்ளது. 

உடலை மீட்டு பார்த்தபோது தான் அது மாயமான 12-ம் வகுப்பு மாணவி என தெரியவந்துள்ளது. மாணவியின் அருகே செல்போனும், கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பியும் இருந்துள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். அப்போது தான் அதிர்ச்சிக்குரிய உண்மை அம்பலமாகியுள்ளது. மாணவி உடன் பயின்று வரும் மாணவனுடன் காதல் உறவில் இருந்த நிலையில், அந்த பெண் இன்ஸ்டாகிராமில் வேறு ஒரு மாணவனுடன் பேசியது காதலனுக்கு தெரியவந்துள்ளது. இது மாணவனை ஆத்திரமடைய செய்துள்ளது.

Kerala-youth-arrested-for-molesting-female-doctor

ஹோலி பண்டிகை அன்று வெளியே வந்த மாணவியை வழி மறித்த காதலன் இன்ஸ்டா பேச்சு தொடர்பாக கேட்டு தகராறு செய்யத் தொடங்கியுள்ளான். தொடர்ந்து ஆத்திரத்தில் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் அடித்து காதலியை சரமாரியாக தாக்கியுள்ளான். இந்த கொடூர தாக்குதலில் அந்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் பள்ளி மாணவன் உண்மையை ஒப்புக்கொண்ட நிலையில், அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web