கோவிலில் வழங்கிய பிரசாதத்தில் இறைச்சி துண்டு.. பக்தர்கள் அதிர்ச்சி!

 
Srisailam

ஆந்திராவில் பிரசித்தி பெற்ற கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் இறைச்சி கிடந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் ஸ்ரீசைலம் மலையில் பிரசித்தி பெற்ற பிரம்ம ராம்பா சமேத மல்லிகார்ஜூன சாமி கோவில் அமைந்துள்ளது. 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

Srisailam

இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமாக புளியோதரை வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் தனது குடும்பத்துடன் ஸ்ரீசைலம் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

கோவிலில் வழங்கப்பட்ட புளியோதரையை வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தார். அவரது வாயில் கடினமான பொருள் சிக்கியது. பின்னர் வாயில் சிக்கிய பொருளை எடுத்துப் பார்த்தார். அப்போது எலும்பு துண்டு இருந்தது. புளியோதரையில் இறைச்சி துண்டுகள் இருந்தைக் கண்டு வேணுகோபால் அதிர்ச்சி அடைந்தார்.


இதுகுறித்து வேணுகோபால் கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் புகார் செய்தார். கோவில் புளியோதரையில் இறைச்சி துண்டு எப்படி வந்தது என கோவிலில் சமையல் செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

From around the web