தமிழ்நாட்டிற்கு புதிய எச்சரிக்கை.. அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு!

 
Rain-Report

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவ மழை இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது. செப்டம்பர் மாதத்தில் பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இந்த மாதம் தொடங்கியது முதலே தென் மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

Rain

இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மியான்மர் கடற்கரையை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய வங்கக் கடலில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 3.1 கிமீ மற்றும் 7.6 கிமீ உயரத்தில் உருவாகியுள்ள சூறாவளி சுழற்சியானது உயரத்துடன் தென்மேற்கு திசையில் சாய்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

வங்காள விரிகுடாவில் தொடர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மகாராஷ்டிராவை நோக்கி நகர்ந்து, ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. பருவமழை செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும், அக்டோபரில் திரும்பப் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி வருவதால், இன்று (செப்டம்பர் 12) முதல் ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web