ஓடும் பேருந்தில் பயங்கர தீ விபத்து.. 2 பேர் உடல் கருகி பலி! அதிர்ச்சி வீடியோ

அரியாணா மாநிலம் குருகிராம் - ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று இரவு (நவ. 8) பயணிகளை ஏற்றிக்கொண்டு வால்வோ பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து என்ஜினில் இருந்து புகை வரத்துவங்கியது. பயணிகள் கீழே இறங்குவதற்குள் தீ மளமள வென பரவியது.
இந்த தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், பேருந்தில் பயணித்த 12 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயண்ப்பு படையினர் தீயை அணைத்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்தப் பேருந்து ஜெய்ப்பூர் நகரில் இருந்து தலைநகர் டெல்லி நோக்கி சென்றுள்ளது. அப்போது குருகிராம் வந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் சிக்கி இந்தப் பேருந்தில் சுமார் 20 பேர் இருந்துள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்களை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். இதனை காவல் உதவி ஆணையர் வருண் தஹியா தெரிவித்துள்ளார். பேருந்தில் தீ பற்றியதற்கான காரணம் குறித்த விவரம் கண்டறியப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து விபத்து: தீயில் கருகி பலி#Gurgaon #accident #fire pic.twitter.com/pksYPj8W05
— A1 (@Rukmang30340218) November 9, 2023
தீ விபத்து காரணமாக குருகிராம் - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சிலர் பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியேறி தப்பி உள்ளனர். தற்போது பேருந்து தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.