பிரபல நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. பதறவைக்கும் காட்சி!

 
UP

உத்தரபிரதேசத்தில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தீயில் கருகி நாசமானது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் மக்கள் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்றாலும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தீயில் கருகி நாசமானது. இந்த நட்சத்திர ஹோட்டல் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான ஸ்ரீ நகர் காலனியில் அமைந்துள்ளது.

Bangladesh-fire

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடியதால் ஹோட்டலில் இருந்து அடர்ந்த புகை மற்றும் தீப்பிழம்புகள் நீண்ட போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் என அதிகாரிகள் தரப்பில் உள்ள அளிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை‌. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web