ஒரு மனிதன் = ஒரு வாக்கு = ஒரு மதிப்பு ! நிலை நிறுத்தியவர் அண்ணல் அம்பேத்கர்
அம்பேத்கருக்கு பதிலாக கடவுள் பெயரை சொல்லியிருந்தால் 7 ஜென்மத்திற்கு சொர்க்கத்திற்கு சென்றிருக்கலாம் - அமித்ஷா சர்ச்சை.
வீடியோவில் உள்ள எள்ளலை பாருங்கள். அண்ணல் அம்பேத்கர் மீது எவ்வளவு வன்மம் அமித்ஷாவுக்கு.
பாவம் - புண்ணியம், சொர்க்கம் - நரகம் என்று திணிக்கப்பட்ட நம்பிக்கைகளை பயன்படுத்தி தான், இந்த நாட்டில் கோடான கோடி பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களை பல நூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்தீர்கள்.
அதையெல்லாம் உடைத்தெறிந்து, ஒரு மனிதன் = ஒரு வாக்கு = ஒரு மதிப்பு என அரசியல் சமத்துவத்தை சட்டப்பூர்வமாக நிலை நிறுத்திய புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்.
இல்லாத சொர்க்கத்திற்கு ஏங்குவதை விட, வாழும் சமூகத்தில் சுயமரியாதை வாழ்வை உறுதி செய்த அண்ணல் புகழை பேசுவதே மேல்.
சொர்க்கம் என்று வரையறுக்கப்பட்ட எதையும் எந்தக் கடவுளும் எங்களுக்கு பெற்றுத் தரவில்லை. சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கி குறைந்தபட்ச நிம்மதியை கொடுத்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வாழ்க.!
- சூர்யா கிருஷ்ணமூர்த்தி