30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து.. 7 பேர் பலி.. ஆந்திராவில் சோகம்!

 
Andhra

ஆந்திராவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றவர்கள் பயணித்த பேருந்து, சாகர் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் பொதிலி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காக்கிநாடாவில் நடைபெறும் திருமணத்தில் பங்கேற்க ஆந்திர அரசு போக்குவரத்து கழக பேருந்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு நள்ளிரவு 12.15 மணிக்கு பொதிலியில் இருந்து புறப்பட்டச் சென்றுள்ளனர்.

Accident

மொத்தம் 45 பயணிகளுடன் சென்ற இந்த சொகுசுப் பேருந்து தர்சி என்ற பகுதியில் இன்று அதிகாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் ஓட்டுநர் கண் அயர்ந்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத் தடுப்பை உடைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள நாகர்சாகர் கால்வாயில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது.  

இந்தக் கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர், 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பெண்கள், ஒரு குழந்தை மற்றும் ஒரு முதியவர் ஆவர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Andhra

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்துக்கு சேர்ந்த அப்துல் ஹானி (60) முல்லா ஜானி பேகம் (65), முல்லா நூர்ஜஹான் (58) ஷேக் ரமீஸ் (48), ஷேக் ஷபீனா (35), ஷேக் ஹினா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தக் கோர விபத்து ஆந்திரா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web