வீட்டுப்பாடம் செய்யாத சிறுமி.. கன்னத்தில் அறைந்த ஆசிரியர்.. காதில் ரத்தம் கொட்டியதால் பரபரப்பு
தெலுங்கானாவில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததில் 2-ம் வகுப்பு சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி அன்றைய தினத்திற்கான வீட்டுப்பாடத்தை முடிக்காமல் வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் என்ற ஆசிரியர் சிறுமியின் கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார்.
இதனால் சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி கார்டு மற்றும் யூனிபார்ம் மீதும் நோட்டுப் புத்தக காகிதங்களின் மீதும் படிந்துள்ளது. பள்ளியில் வேலை செய்துவந்த மற்றொரு ஆசிரியை காயமுற்ற சிறுமி கூறுவதை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் சிறுமியைத் தாக்கிய ஆசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
రెండవ తరగతి విద్యార్థినిని రక్తం వచ్చేలా కొట్టిన ప్రభుత్వ ఉపాధ్యాయుడు
— Telugu Scribe (@TeluguScribe) August 21, 2024
జగిత్యాల - టీఆర్ నగర్ ఎంపీపీఎస్ స్కూలులో హోం వర్క్ రాయకపోవటంతో విద్యార్థినిని కొట్టిన కుమార్ అనే ఉపాధ్యాయుడు
చెవుల్లో నుండి తీవ్ర రక్తం.. నిలదీసిన పేరెంట్స్. pic.twitter.com/W0nsGVsTzi
சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் குமார் மீது எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் சக ஆசிரியை பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.