பிரதமர் மோடி இல்லம் அருகே டிரோன் பறந்ததால் பரபரப்பு.. போலீசார் தீவிர விசாரணை!!

 
PM

டெல்லியில் பிரதமர் மோடி இல்லம் மீது ட்ரோன் பறந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள லோக்  கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் மோடி இல்லம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென பிரதமர் மோடி இல்லம் உள்ள பகுதியில் டிரோன் பறந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Drone

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் டெல்லி காவல்துறையை அதிகாலை 5.30 மணிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பிரதமரின் வீட்டின் மேல் ட்ரோன் பறந்தது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி போலீசார் ட்ரோனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை ட்ரோன் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

From around the web