சாலையில் நடந்து சென்ற சிறுமியை கடித்து குதறிய நாய்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

 
Dog attack

கர்நாடகாவில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை, நாய் கடித்து குதறிய சம்பவத்தின், சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் சமீபகாலமாக தெருநாய்கள் கடித்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கேரளாவில் அதிகம் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது தெலங்கானா, கர்நாடகா, மும்பை என பல்வேறு பகுதியில் தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், மற்றொரு சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது.

Dogs

கர்நாடக மாநிலம் பெங்களுரு கே.ஆர்.புரம் பகுதியில், பால் வாங்குவதற்காக சிறுமி ஒருவரை, அவரது தாய் கடைக்கு அனுப்பியுள்ளார். அப்போது திடீரென ஒரு வீட்டில் இருந்து ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் (German Shepherd Dog) ஒன்று அந்த சிறுமி மீது பாய்ந்தது.

அதன்பின், அந்த சிறுமியை கீழே தள்ளி, கடித்து குதறியது. அக்கம் பக்கத்தினர் அந்த நாயை விரட்ட முயற்சித்தபோது, அந்த நாய் சிறுமியை விடாமல் கடித்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண் அந்த நாயை பிடித்து இழுக்க முயன்றார். அப்போதும் கூட அந்த நாய் சிறுமியை விடுவதுபோல் தெரியவில்லை. 


எப்படியோ ஒரு கட்டத்தில் அருகில் இருந்த பெண் நாயை பிடித்து இழுத்துள்ளார். இதன்பின், அந்த சிறுமி படுகாயத்துடன் கிடந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தின் ஓடிவந்து சிறுமியை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரையும் கதிகலங்க  வைத்துள்ளது.

From around the web