இளம்பெண் வீட்டுக்கு சென்ற பேருந்து ஓட்டுநர் அடித்து கொலை: 8 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை.. கேரளாவில் நள்ளிரவில் பயங்கரம்!

 
Kerala
கேரளாவில் நள்ளிரவில் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்ற பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள திருவாணிக்காவு பகுதியை சேர்ந்தவர் முகம்மது சஹர் (32). இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு இளம்பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டது.
Kerala
அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, இளம்பெண்ணின் வீட்டுக்கு நள்ளிரவில் முகம்மது சஹர் சென்றுள்ளார். இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்த 8 பேர் கும்பல், இளம்பெண்ணின் வீட்டு கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்கப்பட்டது. 
பின்னர் முகம்மது சஹரை வெளியே இழுத்து போட்டு அந்த கும்பல் சரமாரியாக தாக்கி இருக்கிறது. இதில் முகம்மது சஹர் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 


 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முகம்மது சஹர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் 8 பேர் கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web