பெற்ற குழந்தையையே காதலனுடன் சேர்ந்து சித்தரவதை செய்து கொன்ற கொடூர தாய்! கள்ளக்காதலால் நேர்ந்த சோகம்!!

 
Gujarat

குஜராத்தில் 2 வயது குழந்தையை பெற்ற தாயே காதலனுடன் சேர்ந்து சித்தரவதை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலிம்பாய் வாகேர். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஹூசேனா என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ரெஹான் மற்றும் ஆர்யன் என்ற ஆண் குழந்தைகள் இருந்தன. தம்பதிக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்படவே ஹூசேனா கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். 

இந்த நிலையில், ஹூசேனாவுக்கு ஜாகிர் பக்கீர் என்ற வாலிபருடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இந்த உறவுக்கு தனது குழந்தைகள் இடைஞ்சலாக இருப்பதாக நினைத்து தாய் ஹூசேனா பெற்ற குழந்தைகளை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த விஷயம் கணவர் சலீமுக்கும் தெரியவந்து, இதை அவ்வப்போது தட்டிக்கேட்டு வந்துள்ளார். 

baby

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹூசேனா தனது தாய் வீட்டை விட்டு வெளியேறி காதலன் ஜாகீருடன் தனி வீடு எடுத்து வசிக்கத் தொடங்கியுள்ளது. 4 வயது மூத்த மகனை தாய் வீட்டிலேயே விட்டுவிட்டு, 2 வயது குழந்தை ஆர்யனை மட்டும் ஹூசேனா தன்னோடு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி அன்று 2 வயது குழந்தை ஆர்யன் நோய்வாய்பட்டு இறந்துவிட்டதாக தந்தை சலீமுக்கு தகவல் வந்துள்ளது. 

பதறிப்போய் வந்த சலீம் குழந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். குழந்தையின் வயிறு, முதுகு பகுதிகளில் காயங்களும் தழும்புகளும் இருந்துள்ளது. தனது மனைவியும், அவரது காதலன் ஜாகீரும் தான் குழந்தையை அடித்து துன்புறுத்தி கொலை செய்ததாக சலீம் போலீசில் புகார் அளித்தார். 

Bangladeshi-Teen-Arrested-While-Sneaking-Into-India

தொடர்ந்து குழந்தைக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், குழந்தை சித்தரவதை செய்யப்பட்டு உயிரிழந்தது உறுதியானது. சலீம் அளித்த புகாரின் பேரில் ஹூசேனா மற்றும் காதலன் ஜாகீர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web