பள்ளியிலேயே 5-ம் வகுப்பு மாணவிக்கு மயக்க ஊசி போட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!!

 
rape

டெல்லியில் அரசு பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவியை ப்யூன் உள்ளிட்ட 3 பேர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுறள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 14-ம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். அன்று மாலை பள்ளி முடிந்த போது வீடு திரும்பவதற்காக பள்ளி வாசலுக்கு மாணவி சென்றுள்ளார். அப்போது அங்கு ப்யூன் வேலை பார்க்கும் அஜய் குமார் (54) என்பவர் மாணவி அருகே வந்து உன்னை வீட்டில் கொண்டு சென்று விடுகிறேன் எனக் கூறியுள்ளார்.

அப்படியே பேசி தனியாக ஒரு இடத்திற்கு கொண்டு சென்ற அஜய் குமார் அங்கு மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளார். பின்னர் மயக்கத்தில் இருந்த மாணவியை அஜய் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மூன்று பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், மாணவியை பள்ளி வாசலிலேயே விட்டு சென்று தப்பியுள்ளனர்.

rape

வீட்டுக்கு சென்ற மாணவி தனது தாயாரிடம் சம்பவத்தை கூறி இனி பள்ளிக்கு செல்லவே மாட்டேன் என கூறி அழுதுள்ளார். அடுத்த நாள் இறுதி தேர்வுக்கு அவர் செல்லவில்லை. பள்ளி நிர்வாகம் தொடர்பு கொண்ட போது பெற்றோர் மாணவிக்கு நேர்ந்த கொடுமையை புகாராக கூறியுள்ளனர். பள்ளி முதல்வருக்கு இந்த விவகாரம் மறுநாள் (மார்ச் 15) தெரிந்த நிலையில், கடந்த 22-ம் தேதி வரை அவர்கள் போலீசாருக்கு புகார் அளிக்கவில்லை.

பின்னர் போலீசாருக்கு தகவல் தெரியவே அவர்கள் மாணவியின் வீட்டை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். பெற்றோரோ மாணவியின் எதிர்காலம், மனநிலையை கருத்தில் கொண்டு விவகாரத்தை கையாள வேண்டும் என தெரிவித்துள்ளனர். கடும் மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ள சிறுமியிடம் போலீசார் கவுன்சலிங் கொடுத்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ப்யூன் அஜய் குமாரை போலீசார் கைது செய்து போக்சோ சட்டம், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

arrest

மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விஷயத்தை தாமதாக தெரிவித்ததற்காக பள்ளி முதல்வர் உள்ளிட்ட நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், டெல்லி மகளிர் ஆணையம் கையில் எடுத்து விசாரணை மேற்கொள்கிறது.

From around the web