கார் ஏறி இறங்கி 3 வயது பெண் குழந்தை பலி.. வாகன நிறுத்தத்தில் அரங்கேறிய சோக சம்பவம்.. பதைபதைக்கும் வீடியோ

 
Telangana

தெலுங்கானாவில் அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்தத்தில் தூங்கிய 3 வயது குழந்தை தலை மீது கார் ஏறி இறங்கிய சம்பவம சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கலபுரிகி மாவட்டம் ஷாபாத் பகுதியைச் சேர்ந்த ராஜு. இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தையும், மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ஆனால் வாழ்வாதாரத்திற்காக தெலுங்கானா மாநிலம் பாக்யா நகருக்கு வந்தவர்கள் பிஎன் ரெட்டி நகர் அருகே உள்ள ஸ்ரீ கிருஷ்ணாநகரில் வசித்து வருகின்றனர். 

ஹயாத் நகர் அருகே விரிவுரையாளர்கள் காலனியில் உள்ள பாலாஜி ஆர்கேட் அடுக்குமாடி குடியிருப்புக்கு அடுத்ததாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் கட்டிட பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு கவிதா தனது 3 வயது குழந்தையுடன் வந்திருந்தாள். நீண்ட நேரம் விளையாடிய குழந்தை தூங்கியது.

Dead

வேலை செய்யும் நிழலில்லாததால், குழந்தையை பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் தாய் கவிதா படுக்க வைத்துவிட்டு, பின்னர் கட்டுமான பணியில் ஈடுபட்டார். ஆனால் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஹரிராம கிருஷ்ணா என்பவர் தனது காருடன் பாட்டாவில் இருந்து வந்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடத்தில் குழந்தை கிடப்பதை கவனிக்காமல் காரை நிறுத்த முயன்றார். 

அப்போது படுத்திருந்த 3 வயது குழந்தையின் தலை மீது ஏறிய இறங்கியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தாய் கதறி அழுதார். அங்கிருந்தவர்களிடம் தனது குழந்தையின் உயிரை காப்பாற்றும்படி கெஞ்சினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு வனஸ்தலிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஹயாத் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web