திருமண நிகழ்ச்சியில் நடனமாடியபோது திடீரென கீழே விழுந்து உயிரிழந்த 19 வயது இளைஞர்!! அதிர்ச்சி வீடியோ

தெலங்கானாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தையா என்பவரின் குடும்ப திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சித்தையாவின் உறவினரான மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் முத்யம் என்பவர் கலந்துகொண்டார்.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரு பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அப்போது, சில நொடிகளில், அவர் திடீரென நிலைதடுமாறி தரையில் சரிந்து விழுந்தார்.
இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தெலங்கானாவில் கடந்த ஒரு வாரத்தில் இதுபோன்ற 3வது சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மது அருந்துதல், புகைபிடித்தல், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் இளைஞர்களிடையே திடீர் மாரடைப்பு நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், சிலருக்கு இதுபோன்ற ஆபத்து காரணிகள் எதுவும் இல்லை.
26 Feb 2023 : 🇮🇳 : Teenager dies of 💔arrest💉 while dancing
— Anand Panna (@AnandPanna1) February 26, 2023
Muthyam (19) belonged to Shivuni village in Maharashtra. Muthyam collapsed when he was dancing to a Telugu film song during a reception party held at Pardi village. #heartattack2023 #TsunamiOfDeath pic.twitter.com/E5gUFhjULL
இளம் வயதினருக்கு இதயப் பிரச்சினைகளுக்கான பிற பொதுவான காரணங்கள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற மருத்துவ காரணங்கள், வாழ்க்கை முறை சிக்கல்கள், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை அடங்கும்.