19 வயது இளம்பெண்ணை 3 பேர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. மணிப்பூர் பழங்குடிப் பெண் கண்ணீர்!

 
Manipur

மணிப்பூர் கலவரத்தில் கடந்த மே 15-ம் தேதியன்று, தானும் 3 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக பழங்குடியினப் பெண் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மணிப்பூரில் பைரோன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல் மெய்டீஸ் மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே வன்முறை வெடித்து வருகிறது. இந்த மோதலில் 142 பேர் உயிரிழந்த நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணிப்பூர் மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக வன்முறை தீ அணியாமல் எரிந்து கொண்டு இருக்கும் மணிப்பூரில் மறைக்கப்பட்ட மனித தன்மைற்ற கொடுமைகள் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் ஒவ்வொன்றாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. குக்கி இனத்தைச் சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற வன்முறை கும்பல் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததும் 45 வயது பெண்ணை தீயிட்டு கொளுத்தியதும் வெளியாகி பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தற்போது மற்றுமொரு பழங்குடியினப் பெண், மே 15-ம் தேதியன்று தானும் மூன்று பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Rape

தனக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாகத் தனியார் ஊடகத்திடம் விவரித்த பாதிக்கப்பட்ட 19 வயது பழங்குடியினப் பெண், “கலவரக் கும்பலிடமிருந்து தப்பிக்க ஏடிஎம்-முக்குள் சென்றேன். ஆனால், 4 பேர் வெள்ளை நிற பொலேரோவில் வந்து கடத்திச் சென்றனர். டிரைவரைத் தவிர, அவர்களில் 3 பேர் என்னைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் ஒரு மலைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு அவர்கள் என்னைச் சித்ரவதை செய்தனர். இரவு முழுவதும் சாப்பிட எதுவும் கொடுக்காமல், என்னை எந்த அளவுக்குக் கொடுமைபடுத்த முடியுமோ அந்த அளவுக்குக் கொடுமைப்படுத்தினர். குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்கவில்லை.

அடுத்த நாள் காலை கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டபோது. அவர்கள் என்னை அவிழ்த்துவிட்டனர். அப்போதுதான் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முயன்றேன். பிறகு அங்கிருந்து தப்பிக்க முடிவுசெய்து ஒருவழியாகத் தப்பித்துவிட்டேன். அதன் பிறகு மே 21-ம் தேதிதான் போலீசில் புகாரளிக்க முடிந்தது” என்றார். தப்பிக்கும்போது காய்கறி குவியலில் மறைத்திருந்த அந்தப் பழங்குடிப் பெண்ணை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாதுகாப்பாக மீட்டார். அதன் பிறகு அந்தப் பெண் சொந்த ஊரை அடைந்தார்.

Police

அதையடுத்து அவர், பக்கத்து மாநிலமான நாகாலாந்தில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக, 21-ம் தேதி காங்போக்பி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வழக்கிலும் சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாமல் கைது செய்யப்படவில்லை என்ற வாசகமே தொடர்கிறது.

இருப்பினும் இதில் விசாரணை நடைபெற்றுவருவதாகக் கூறும் போலீஸ் தரப்பு, “பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இல்லாதது விசாரணைக்கு இடையூறாக இருக்கிறது. ஆதாரம் இல்லாததால் இத்தகைய பெண்களுக்கு நீதி கிடைப்பது சவாலான விஷயமாக மாறியிருக்கிறது” என்று கூறுகிறது.

From around the web